நீளும் ஊழல் பட்டியல்.. "மு.க ஸ்டாலின் குடும்பம் மொத்தமாக".. பகிர் கிளப்பும் அண்ணாமலை..!!
Annamalai has questioned CM MKStalin about corruption
கடந்த சில மாதங்களாக மு க ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் செய்த ஊழல் குறித்து ஆதாரங்களுடன் இன்று வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் குறித்தான ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் குறித்தான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் இப்பொழுது சிங்கப்பூரில் உள்ள ஷெல் நிறுவனம் மூலம் அப்போதைய துணை முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாகவும் பேசி உள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மூன்று கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு பணம் வந்தது எப்படி..?
இது குறித்து பேசி அண்ணாமலை "உதயநிதி ஸ்டாலின் 2008 ஆம் ஆண்டு ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் ஆரம்பிக்கும் பொழுது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த வித சொத்தோ தொழிலோ உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. கடந்த 2008ல் இருந்து 2011 வரை சுமார் 300 கோடி ரூபாய்க்கு படங்களை தயாரித்து உள்ளனர். ஆனால் அந்த படங்கள் அனைத்தும் நஷ்டத்தில் ஓடி உள்ளது. அவ்வாறு இருக்கும் பொழுது அந்த பணம் எங்கிருந்து வந்தது..?
ரெட் ஜெயின் மூவிஸ் முதலீட்டாளர்கள் யாரு..? அவர் கடன் வாங்கியுள்ளார் என்றால் அதைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டியது கட்டாயம் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது. இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மதிப்பீடு 2100 கோடி ரூபாய். இது குறித்தான அனைத்து தகவல்களும் இணையதளத்தில் வெளியிடுகிறோம்.
பண மோசடியில் ஈடுபடும் நிறுவனத்தின் இயக்குனருடன் சபரீசனுக்கு என்ன தொடர்பு..?
அடுத்ததாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன். இவர் கருப்பு பணம், வெள்ளை பணம் என்பதைத் தாண்டி பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். வெஸ்ட் பேங்க் என்ற ஆப்பிரிக்க நிறுவனம் பண மோசடியில் ஈடுபடுவதாக ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
இந்த நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பேங்க் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் லண்டன் இயக்குனர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீனிவாச வெங்கடேஷ்.
இவர் செயின்ட் ஜார்ஜ் பேங்க் அமைந்துள்ள அதே கட்டிடத்தில் இரண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த இரண்டு நிறுவனத்திலும் சபரீசன் பங்குதாரராக இருந்து வருகிறார். எனவே பண மோசடியில் ஈடுபடும் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் ஒருவரின் வேறு இரு நிறுவனத்தில் சபரீசன் பங்குதாரராக இருந்து வருகிறார். இதற்கு முதலமைச்சரும் சபரீசனும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
நோபல் ஸ்டில்ஸ் நிறுவனத்தில் உதயநிதி, அன்பில் மகேஷ்..?
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துபாய் சென்ற பொழுது பண மோசடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டு இருந்தேன். அனைவரும் ஏன் என கேள்வி எழுப்பி இருந்தீர்கள். முதலமைச்சர் துபாய் சென்ற பொழுது நிறைய ஆவணங்களில் கையெழுத்திட்டார் அதில் ஒரு ஆவணம் நோபல் ஸ்டில்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அதை திமுகவினர் பெருமையாக சொன்னார்கள்.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பஷீர் முகமது என்பவர் தற்பொழுது இருந்து வருகிறார். ஆனால் கடந்த 2009இல் உதயநிதி ஸ்டாலின் நிர்வாக இயக்குனராக இருந்துள்ளார். அதன் பிறகு அந்த பதவியில் இருந்து விலகுகிறார். பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2016 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார் பின்பு அவரும் அப்பதிவையில் இருந்து விலகுகிறார். இந்த நிறுவனம்தான் தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்படும் மனுக்களில் இந்த விவரம் இடம் பெறக் கூடாது என உதயநிதி ஸ்டாலினும் அன்பில் மகேஷும் இந்த பதவிகளில் இருந்து விலகுகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு முதலீடாக வர உள்ளது. எனவே இது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
கடந்த 2006 இல் இருந்து 2011 வரை திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்குவதற்கான அனுமதிகள் வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ஜப்பானில் சேர்ந்த ஜிகா என்ற நிறுவனம் நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு 59% ஜிகா நிறுவனமும், 15% +5% மத்திய அரசும், மாநில அரசு 21% என திட்டத்திற்காக செலவு செய்துள்ளது.
சிங்கப்பூர் நிறுவனம் மூலம் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம்..!!
இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 14,600 கோடி ரூபாய். தேர்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் பொழுது இந்த திட்டத்திற்கு அவசரமா ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதில் இந்திய நிறுவனம் ஒன்றும், பன்னாட்டு நிறுவனம் ஒன்றும், அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்ஸ்டா நிறுவனமும் ஒன்று.
இந்த ஒப்பந்தமானது ஆல்ஸ்டா நிறுவனத்திற்கு வழங்க முதலமைச்சரின் மு.க ஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஷெல் நிறுவனம் மூலமாக மு.கஸ்டாலினுக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் தேர்தல் பணிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதை தமிழ்நாட்டில் உள்ள ஷெல் நிறுவனம் மூலம் திமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை நான் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் மீது நேரடி புகாராகவே வைக்கிறேன். இதை இந்த ஊழலை நான் புகாராக சிபிஐக்கு இன்று அனுப்ப உள்ளேன்" என அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
English Summary
Annamalai has questioned CM MKStalin about corruption