அடுத்த பரபரப்பு.. ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி.. "வாரி குவித்த உதயநிதி & சபரீசன்".. அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி "DMK files" என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினர் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் குறித்தான சொத்து பட்டியலை வெளியிட்டது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அண்ணாமலை வெளியிட்ட அனைத்தும் ஆதாரமற்றவை என திமுக தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை வழக்குகளை எதிர் கொள்ள தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் டெல்லியை சேர்ந்த ஊடகவியாளர் ஒருவருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் "உதயநிதியும் சபரீசனும் அவர்களது முன்னோர்களை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது இது பிரச்சினையாகியுள்ளது. இதை எப்படி கையாள்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என சிறுசிறு குவித்துள்ளனர். அது தோராயமாக ஒரு 30,000 கோடி இருக்கும்" என பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "தமிழக முதல்வரின் மகன் உதயநிதி & மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் குவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் செய்தியாளர் ஒருவருடன் உரையாடியுள்ளார். ஒவ்வொரு நாளும், #DMKFiles இல் நாங்கள் கூறியுள்ள கூற்றுகளை இவை உறுதிப்படுத்துகின்றன" என பதிவிட்டுள்ளார். தற்பொழுது அண்ணாமலையின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai released audio PTR spoke about udhayanithi and sabarisan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->