"அத்தைக்கு மீசை முளைத்திருந்தால் சித்தப்பா என்பார்"... முதல்வர் மு.க ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை ..!!
Annamalai retorts to CM Stalin speech on Sethu Samudhra project
சேது சமுத்திர திட்டம் குறித்தான முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி..!!
திமுக பொருளாளர் டி.ஆர் பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாஜக சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசும் பொழுது "அத்தைக்கு மீசை முளைத்திருந்தால் சித்தப்பா என்பார்" என்பது போல சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் தமிழ்நாடு தொழில் வளம் பெருகி இருக்கும் என்று ஒரு சிரிப்பு வெடியை தூக்கி போட்டு உள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை டி.ஆர் பாலு முன்னெடுத்ததால் பாஜக தடுத்து நிறுத்தியது என முதல்வர் குறை பேசினார். பொதுமக்கள் சேது சமுத்திர திட்டத்தை பற்றி முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெரும் கப்பல்கள் செல்லக்கூடிய அளவிற்கு மணல் தீட்டுக்களை எடுத்து ஆழ்கடல் பகுதியில் வீச வேண்டும். கடலில் இருந்து மண்ணை அள்ளி கடலுக்குள்ளே வீசுவதால் எவ்வளவு வேலை முடிந்தது என கண்டுபிடிக்க முடியாது.
இதற்கு மட்டும் ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் செலவாகும். இந்த திட்டத்தின் மூலம் தன்னையும் தன் கழகத்தையும் வளப்படுத்திக் கொள்ள டி.ஆர் பாலு முயற்சித்தது உண்மைதான். இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்த வேண்டுமென கருணாநிதி முயற்சித்த போது மணல் அள்ளும் ஒப்பந்தத்தை எடுப்பதற்கு கலைஞர் குடும்பத்தில் இருந்த ஒருவருக்கும் டி.ஆர் பாலவிற்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் ஒரே நேரத்தில் ஒரு கப்பல் மட்டுமே அந்த வழியாக சென்று இருக்க முடியும். மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை மேயராக இருந்த பொழுது கட்டிய ஒரு வழி பாதை மேம்பாலத்தை போல சேது சமுத்திர திட்டத்திலும் ஒரு வழி பாதை மட்டுமே அமைந்திருக்கும். ஒருவேளை இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் எத்தனையோ பலன்களை டி.ஆர் பாலுவும் திமுகவும் அடைந்திருக்க அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கும்.
"செத்துப்போன மாடு இருந்தா உடைந்து போன கலயத்தில் ஒரு படி பால் கறக்கலாம்" என்ற அர்த்தமில்லா பேச்சை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். ஏற்கனவே தூத்துக்குடியில் இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகத்தை வணக ரீதியாக சிறப்பாக எப்படி நடத்துவது என்ற அடிப்படை சிந்தனைக் கூட இந்த அரசுக்கு இல்லை.
இந்தியர்களின் பாரம்பரிய நம்பிக்கையான ராமர் பாலத்தை இடித்து விட்டு அங்கே அறிவியல் சாத்தியமில்லாத ஒரு நீர் வழித்தடத்தை உருவாக்கி மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக தீட்டப்பட்ட சேது சமுத்திர திட்டத்தை நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தி இருந்தால் இந்தியாவின் மானம்தான் கப்பல் ஏறி இருக்கும். திமுக பொருளாளர் டி.ஆர் பாலுவின் சுய சரிதையான "பாதை மாறா பயணம்" திமுகவின் கமிஷன், கலெக்சன், கரெப்ஷன் என்ற பாதை மாற பயணத்தை உறுதி செய்கிறது" என அண்ணாமலை தனது அறிக்கையின் மூலம் பதிலடி தந்துள்ளார்.
English Summary
Annamalai retorts to CM Stalin speech on Sethu Samudhra project