அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட்., திமுக அமைச்சரின் பெயர் வெளியானது.!  - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

"மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார். அவர் தமிழ் உரையாற்றிய போதும் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் தர்ணா செய்கின்றனர்.

தர்ணா என்ற பெயரில் தமிழக மக்களின் நல்ல பெயருக்கு கலங்கத்தை விளைவித்துள்ளனர். ஒரு பாராளுமன்ற எம்பி ஆக இருக்கக்கூடிய தகுதி, கண்ணியத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இல்லை.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு சம்பந்தமாக பாஜக அடிப்படை விசாரணை செய்து முடித்துள்ளது. அரசின் இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்தவுடன் எங்கள் அறிக்கையை சமர்பிப்போம்.

தற்போது அமலாக்கத்துறை வேறு விவகாரத்தில் பிசியாக உள்ளனர். விரைவில் செந்தில்பாலாஜியிடம் அமலத்துறையின் விசாரணை நடக்கும்" என்று அண்ணாமலை தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai say about tn minister in ED inquiry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->