'ஸ்ட்ராங்கா இருங்கண்ணா....! ' - சீமானுக்கு ஊக்கம் கொடுத்த அண்ணாமலை...!
Annamalai which encouraged Seeman that be a strong person
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் நடிகை கொடுத்த பாலியல் புகார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுத்தடுத்து சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சீமானை சந்தித்த போது அவருக்கு தைரியம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு சென்னையில் நேற்று பா.ஜ.க. நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் நடைபெற்றது.

அண்ணாமலை சீமான்:
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அங்கு வந்த சீமானை எதிர்பாராதவிதமாக சந்தித்தார். மேலும் காரில் அமர்ந்திருந்த சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, எப்படிண்ணா இருக்கீங்க? என்று நலம் விசாரித்தார்.
அதற்கு சீமான் நலமாக இருக்கிறேன் என்று பதில் கூறினார்.தொடர்ந்து அண்ணாமலை, "பைட் பண்ணிட்டே இருங்கண்ணா... ஸ்ட்ராங்கா இருங்கண்ணா... விட்றாதீங்கண்ணா" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகி வருகிறது. மேலும் பி.கே சேகர் பாபு போன்றோர் ,'இவர்கள் சண்டை நிழல்கூட மோதுவது போன்றுள்ளது 'என விமர்சித்துள்ளார்.
English Summary
Annamalai which encouraged Seeman that be a strong person