எத்தனை சுபஸ்ரீகள் இறந்தால் நமக்கென்ன? முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வந்துவிடும் - அறப்போர் இயக்கம்!
Arapor Iyakkam Condemn to DMK Govt MK Stalin Adani baner issue
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அதானி ஊழலுக்கு எதிரான போராட்டம் என்றால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோபம் வந்துவிடும் என்பதால் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் வள்ளுவர் கோட்டத்தில் ஒரு பாதியில் கூட அறப்போருக்கு அனுமதி இல்லை.
ஆனால் முதல்வர் பிறந்த நாள் என்றால் சாலையை முழுவதுமாக அடைத்து போக்குவரத்து போக முடியாதபடி நாங்கள் அனுமதி கொடுப்போம்
ஏனென்றால் நாங்கள் லஞ்சத்திற்காகவும் பதவிக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்யும் தமிழ்நாடு மற்றும் சென்னை காவல்துறை" என்று தெரிவித்துள்ளது.
இதேபோல் அறப்போர் இயக்கம் ஜெயராமன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "சுபஸ்ரீ அதிமுக பேனர் விழுந்து இறந்தார். உடனடியாக இறந்த வீட்டில் எப்படி ஓட்டு அரசியல் செய்வது என்பதற்காக அவரிடம் திமுக இனி பேனர் வைக்காது என்று உயர்நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த பிரமாண பத்திரம் காண்பித்து ஏமாற்றினேன் .
தற்பொழுது தேர்தலுக்கு ஒரு வருட காலம் இருக்கும் நிலையில் திமுகவினரிடம் எத்தனை சுபஸ்ரீகள் இறந்தால் நமக்கென்ன? நமக்கு பேனரும் கொடிக்கம்பமும் தான் முக்கியம். அதனால் இஷ்டத்திற்கு வையுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
காவல்துறை டிஜிபி சட்டத்தின்படி நடக்க மாட்டார். பதவிக்காக நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பார். அவரிடம் பாஜக பேனர் வைத்தால் கூட தொடக்கூடாது என்று சொல்லிவிட்டேன். வெளியே நாங்கள் சண்டை இட்டுக் கொள்வது போல் சண்டை இடுவது பார்த்துவிட்டு உண்மை என்று நினைத்து விட்டு அவர் பேனரை தூக்கி விட்டால் நான் என்ன செய்வேன். அதானி கோபித்துக் கொள்ள மாட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Arapor Iyakkam Condemn to DMK Govt MK Stalin Adani baner issue