தீபாவளிக்கு நாட்டில் மொத்த சிறப்பு ரயில்கள் இவ்வளவு தானா?....வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களாக விளங்கும் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, போபால், திருவனந்தபுரம் , லக்னோ மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வசிக்கும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி, மகர சங்கராந்தி, தசரா உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும் போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை யொட்டி  பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தினமும் கூடுதலாக 2 லட்சம் பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளுக்கு ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், வடக்கு ரெயில்வே கணிசமான எண்ணிக்கையிலான ரெயில்களை இயக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

7000 ரயில்களை விட மேலும் கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என்று, சமூக வலைத்தளங்களில் பயணிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் தீபாவளி காலத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், 7000 ரயில் என்ற அறிவிப்பிற்கு நெட்டிசன்கள் பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are there so many special trains in the country for diwali


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->