நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : அரியலூரில் முதல் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில், இன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் இரண்டு லட்சம் ரூபாய் எடுத்துவரப்பட்டு பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, தேர்தல் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த சோதனையில், காரில் பயணம் செய்த தேன்மொழி என்பவர் கொண்டு வந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் எதுவும் இல்லை. இதனை அடுத்து அந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்து, நகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், அரியலூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் சம்பவம் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ARIYALOR ELECTON FORCE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->