ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகிக்கு 40 ஆண்டு சிறை!
Australia Woman Harassment case BJP Palesh
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத் தலைவர் பாலேஷ் தன்கர் (43) போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை பயன்படுத்தி பல்வேறு பெண்களை துன்புறுத்திய சம்பவத்தில் 40 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
பாலேஷ் தன்கர், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக இருந்ததுடன், பாஜக கட்சியின் அந்நாட்டு குழுவை உருவாக்கி செயல்பட்டவரும் ஆவார்.
அவர், வேலை தேடி வந்த 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டைச் சேர்ந்த பெண்களை சிட்னியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று, போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களை வீடியோ பதிவு செய்ததுடன், அவர்களின் தனிப்பட்ட விவரங்களை எக்ஸெல் சீட்டில் பதிவு செய்து, அவர்களின் அறிவு, தோற்றம் போன்றவற்றுக்கு மதிப்பெண்கள் அளித்ததாக கூறப்படுகிறது.
2018 ஆம் ஆண்டு சிட்னியில் உள்ள அவரது வியாபார மையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட மறைமுக கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.
2023 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணையில், அவர் 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும், 2053 வரை பரோல் வழங்கப்படமாட்டாது என்றும், அவரது 83 ஆவது வயதில் மட்டுமே அவர் விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Australia Woman Harassment case BJP Palesh