அண்ணன் ஓபிஎஸ்-யை அப்படி செய்ததே எடப்பாடி பழனிசாமி தான் - பரபரப்பு பேட்டி.!
bangalore pugalenthi say admk ops vs eps
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கக்கூடிய பெங்களூர் புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,
"தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை கட்சியின் தலைமை ஓ பன்னீர்செல்வம் தான். அவருடைய முடிவுகள் தான் செல்லும். அது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பிலேயே இருக்கிறது. இதனை நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம்.
என்ன பெரிய பெரும்பான்மை வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையத்தின் படிவத்தில் அண்ணன் ஓபிஎஸ் தான் கையெழுத்திட்டு இருக்கிறார். அவர் கையெழுத்திட்டு தான் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.
உங்கள் பதவியை வேண்டுமானால் ராஜினாமா செய்து கொள்ளுங்கள். இதை கேட்டீர்கள் என்றால் நடுராத்திரியில் சீவி சண்முகம் பதில் சொல்வார் உங்களுக்கு.

ஆட்சியில் இருக்கும் போது ஓபிஎஸ் இடம் எதையும் கலந்து பேசுவது இல்லை. கட்சியிலும் எந்த ஆலோசனையும் இல்லாமல் இருந்தது. பணம், பதவி, அதிகார உச்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, அண்ணன் ஓபிஎஸ்-யை செயல்பட விடாமல் தடுத்து வைத்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த ஆட்சி கொள்ளை அடித்திருப்பது தான் உண்மை. அவர் கீழே இருந்த அமைச்சர்கள் கொள்ளை அடித்து இருப்பதும், ஊழல் செய்திருப்பதும் உண்மை.
அதிமுகவின் பொதுக்குழு அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் நிச்சயமாக கூட்டப்படும். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன், உண்மையைத்தான் சொல்கிறேன், தனி ஒரு மனிதராக எடப்பாடி பழனிசாமி நிற்பதை தவிர்க்கவே முடியாது. இதனை எதிர்காலம் சொல்லும்" என்று புகழேந்தி தெரிவித்தார்.
English Summary
bangalore pugalenthi say admk ops vs eps