ஓ பன்னீர்செல்வத்தின் தலையில் இடியை இறக்கிய செய்தி.. எடப்பாடி மாஸ்டர் பிளானில் ஓபிஎஸ் அவுட்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி வங்கிகளுக்கு கடிதம் அனுப்பினார். 

அதிமுக கட்சி தொடர்பான வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனவும் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஓ பன்னீர்செல்வம் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு எழுதிய கடிதத்தில், என்னை கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்க கூடாது. நான் தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன். 

கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும், இது தொடர்பாக வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கி கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank accepted Dindigul Srinivasan appointment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->