ஒரு ரூபாய் லஞ்சம்! 300 கோடி ஊழல்! நியாயமா? இது நியாயமா?.. தமிழக பாஜக கேள்வி..!!
BJP accuses tngovt bribe of one rupee per kg of paddy
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அரசு நெல் கொள்முதல் செய்ய கிலோவுக்கு ஒரு ரூபாய் லஞ்சம் பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு கிலோ ஒன்றிற்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூபாய். 2060 ஐ (கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய், 60 காசுகள்) முழுமையாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களை அமைத்து குறைந்த பட்ச ஆதார விலைக்கு வாங்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது.
தமிழகத்தில் வருடத்திற்கு சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் (அதாவது 300 கோடி கிலோ) நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்வதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கிறது. விளைவித்த பொருளுக்கு ஒரு பைசா கூட விவசாயிகள்செலவு செய்ய தேவையில்லை.
ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் ரூ.1/- லஞ்சமாக பெறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.1/- லஞ்சப்பணமாக 300 கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுகிறது. இந்த பணத்தை இடைத்தரகர்களும், அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் பங்கு போட்டு கொள்கின்றனர். ஆனால், இவர்கள் தான் முழு நிதியையும் செலுத்தி நெல்லை வாங்கும் மத்திய அரசை குறை கூறி வருகின்றனர்.
முழு தொகைக்கான பணமும் நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால், லஞ்சம் ஒரு ரூபாய் லஞ்சம் செலுத்த மறுத்தால் கொள்முதல் செய்ய மறுக்கப்படுவது கொடுமையான செயல். எவ்வளவு போராடியும் இந்த ஊழல் அமைப்பை அசைத்து கூட பார்க்க முடியாத கட்டமைப்பை பெற்றுள்ளது தான் 'திராவிட மாடல்'!!!
ஒரு ரூபாய் லஞ்சம்! 300 கோடி ஊழல்!
நியாயமா? இது நியாயமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP accuses tngovt bribe of one rupee per kg of paddy