தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால் எங்களை வியக்க வைக்க முடியாது - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


ஆகஸ்ட் 14-ந் தேதி சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான ஆகஸ்டு 14-ந் தேதியே மதுபானங்களை வாங்குவதற்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் குவிந்தனர். இதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில் அன்றைய தினம் மட்டும் வழக்கமான நாட்களை விட அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 14-ந் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 

"தமிழக முதல்வர் ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட் 11ல் உறுதிமொழி எடுத்தார். தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் 274 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 

தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால் எங்களை வியக்க வைக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai speech DMK drugs free in tamilnadu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->