வெறும் 13 மாதம் தான்! அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த மாநில செயலாளர் - தட்டி தூக்கிய டிடிவி!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பணியை தற்போதே தொடங்கியுள்ளன.

தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், தங்களுடைய கட்சிப் பணிகளையும், கூட்டணி குறித்த கணக்குகளையும் அரசியல் கட்சிகள் போடத் தொடங்கியுள்ளன.

மேலும் ஒரு கட்சிகள் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் படலங்களும் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக அதிமுகவிலிருந்து திமுகவிற்கும், திமுகவில் இருந்து அதிமுகவிற்கும், அதிமுகவில் இருந்து பாஜகவிற்கும், அமமுக.,விலிருந்து அதிமுகவிற்கும் என்று, பல பிரமுகர்கள் கட்சி தாவிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக மாநில விவசாய அணி செயலாளர் K.S.K.பாலமுருகன் அக்கட்சியில் இருந்து விலகி, இன்று அமமுகவில் இணைந்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று நேரில் சந்தித்து தன்னை மீண்டும் அமமுகவில் இணைத்துக் கொண்டார்.

இவர் ஏற்கனவே கடலூர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமமுகவில் இருந்து விலகி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் சரியாக 13 மாதங்களில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அமமுகவில் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Balamurugan Joint to AMMK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->