கோவில் நிலத்தை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை - பா.ஜ.க எச்.ராஜா.!
BJP H.Raja press meet in thirupparangunram
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை எந்த ஒரு பொது காரியத்திற்காகவும் விற்பனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், திமுக அரசு கோவில் நிலங்களை விற்க திட்டமிட்டு வருகிறது. கோவில் நிலங்களை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நீதிமன்ற உத்தரவை மீறி விற்பனை செய்தால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது விசாரணை முடிந்த பின்பு தான் உண்மை தெரியவரும்.
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவில்லை இது குறித்து கேள்வி கேட்காத திருமாவளவன் ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP H.Raja press meet in thirupparangunram