'கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது; மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாகவே பா.ஜ. இருக்கிறது'; தமிழக முதல்வர்..! - Seithipunal
Seithipunal


தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டம் கிண்டியில் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்வர்கள் மற்றும் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தி.மு.க., கூறி வருகிறது. இதனால் தன் கருத்தை வலியுறுத்தும் நோக்கில், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக 07 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். 

இந்த குழு கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ''ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளோம். இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல; அதிகாரம் பற்றியது.'' என்று குறிப்பிட்டார். 

அத்துடன், மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை நடந்தால், சொந்த நாட்டிலேயே அதிகாரம் அற்றவர்களாக நம்மை மாற்றி விடும் எனவும், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இது, தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல; நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சி'' என்று பேசினார். 

மேலும் அவர் இக்கூட்டத்தில் பேசுகையில், இந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கோவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்-ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை எனவும், குழப்பமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளதோடு, மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாகவே பா.ஜ., எப்போதும் இருந்து வருகிறது என்று கூறினார். 

அத்துடன், மாநில உரிமையை நிலைநாட்ட தொடர் நடவடிக்கை அவசியம் என்றும், ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் தான் வெற்றி பெற முடியும் எனவும், எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. குறையவும் விடக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறைந்தால், நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறையும் என குறிப்பிட்ட அவர், மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளதாகவும்,  தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார். அத்துடன்,  தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்பதை ஏற்க முடியாது என்று ஸ்டாலின் பேசியமை குறிப்பிடத்தக்கது.

இந்த குழு கூட்டத்தை மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP is a party that is taking away state rights Tamil Nadu Chief Minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->