இந்தி பிரச்சனை!!!பாஜக ஒரு மாயத் தோற்றத்தை திட்டமிட்டு இருக்கிறதாம்!!!- திருமாவளவன்
BJP is planning a magical appearance because Hindi problem Thirumavalavan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,"இருமொழிக்கொள்கையே இந்தியாவிற்கு போதுமானது. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருமொழிக் கொள்கையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

ஆகவே, மும்மொழிக்கொள்கை என்பதை அரசின் கொள்கையாக, இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீது திணிப்பது கூடாது என்பது தான் நம்முடைய தமிழ்நாட்டு அரசின், தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு ஆகும்.ஆனால், பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் இந்தியை படித்தால் உடனே வேலைவாய்ப்பு கிடைத்துவிடும், இந்தியை படித்தால் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பை பெற முடியும் என்ற மாயத்தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.
மேலும் இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தி பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
இப்படி இருக்க ஒரே தேசம் ஒரே மொழி என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குகிற உள்நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் மற்றும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் செய்வதை அம்பலப்படுத்துகிறோம். அதை எச்சரிக்கிறோம்" எனத் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு அரசியல் ஆர்வலர்கள் பலர் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
BJP is planning a magical appearance because Hindi problem Thirumavalavan