கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சி! திமுகவை வெளுத்து வாங்கிய நயினார்!
BJP Nayinar Condemn to DMK
பாஜகவின் தமிழநாடு மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்!
ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்!
ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் முக ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது!
முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!
இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்!
பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே!
இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Nayinar Condemn to DMK