பார்க்க சகிக்கவில்லை, இது என்ன கேலிக்கூத்து, அபத்தம், அவமரியாதை! விஜய், ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம் தெரிவித்த பாஜக SG சூர்யா! - Seithipunal
Seithipunal


நேற்றைய புத்தக வெளியீட்டு விழா பல கோடிகள் கொட்டி மிக மிக செயற்கையாகவும், புத்தக வெளியீடுகளுக்கே உண்டான உயிர் இல்லாமல் சிலரை மட்டுமே promote செய்யும் விழாவாக அமைந்து முடிந்துள்ளதாக பாஜகவின் மாநில செயலாளர் SG சூர்யா.விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "எளியோருக்காக பேசுகிறேன், எளியோர் வாழ்வை முன்னேற்ற பேசுகிறேன், எளியோரை அரசியல்படுத்த பேசுகிறேன் என சொல்வதெல்லாம் சரி தான், ஆனால் அதை யார் சொல்கிறார்கள் என்பதும் முக்கியம்.

இந்தியாவில் வாரிசு அரசியல்வாதிகள் சோபித்த வரலாறு பல உண்டு ஆனால் திடீர் குபீர் parachuted அரசியல்வாதிகள் சோபித்த வரலாறு எனக்கு தெரிந்து இல்லை. 

பொது தளத்திலேயே இல்லாத ஒருவர், உருப்படியாக கோர்வையாக தமிழே பேச வராத ஒருவர் திடீரென parachute செய்யப்பட்டு பல கோடிகளை கொட்டி ஒரு பிரபல ஊடக நிறுவனத்தின் குடையில் ஒரு புத்தக வெளியீட்டை நடத்தி தன்னை மிகப்பெரிய அரசியல் சாணக்கியன் போல நிறுவ முயல்வது ஆபாசமாகவும், அபத்தமாகவும் இல்லையா?

மக்களை இளிச்சவாயர்களாக கருதுவது போல் இல்லையா? இந்த சர்க்கஸ் கூத்தை ஊதி பெரிதாக்க மேலும் பல கோடிகள் ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் வலையொளிகளுக்கும் கொட்டப்பட்டுள்ளதும் கண்க்கூடாக தெரிகிறது. 

நம் கேள்வி ஒன்றே? இத்தனை கோடிகளை கொட்டி தான் எளியோருக்கான உரிமைகளை பெற்றுத் தர போகிறீர்களா? இப்படி கொட்டப்படும் கோடிகள் எளியோரை சுரண்டாமல் வந்ததென எதன் அடிப்படையில் மக்கள் முடிவு செய்வது?
 
இதென்ன கேலிக்கூத்து? தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது என்றே புரியவில்லையே?

கோடிகளை கொட்டினால் நாளை திடீரென குதிக்கும் ஒருவரை ஆகச்சிறந்த அரசியல்வாதியாக உருவாக்கி விட முடியும் என்றால் இதை விட எப்படி அண்ணல் அம்பேத்கர் வகுத்த அரசியல்சாசனத்தை ஏளனப்படுத்த முடியும்?

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரே 15 நிமிடம் தான் பேசுகிறார். ஆனால் இந்த திடீர் அரசியல்வாதி 24 நிமிடம் பேசுகிறாரே?

பார்க்க சகிக்கவில்லை. வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் தான் நாங்கள், ஆனால் அதற்கு முன்பு இந்த திடீர் குபீர் அரசியல்வாதிகளை தோலுரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது போல.

அண்ணல் அம்பேத்கரை போற்றுகிறேன் என்ற பெயரில் நடைபெற்றுள்ள இந்த கேலிக்கூத்து உண்மையில் அண்ணலை அவமதித்துள்ளது, இந்நிகழ்விற்கு கொட்டப்பட்ட பல கோடி ரூபாய் தாள்கள் அவரின் தூய்மையான எண்ணத்தை களங்கப்படுத்தி உள்ளது என்பதே நிதர்சனம்" என்று SG சூர்யா தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP SG Surya condemn to TVK Vijay VCK Adav Arjuna


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->