TNPSC கேள்வியை மாற்றிய பாஜக! அந்த 4 ஆப்ஷன் தான் ஹைலைட்!
BJP TN TNPSC TNGovt MK Stalin
கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற TNPSC குரூப் 2A தேர்வில் தமிழ்நாட்டில் முதல்வரை தாயுமானவர் என்று அழைக்கக் காரணமான திட்டம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்க்கு பல்வேறு தரப்பினரும் கடும் கணடனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக தரப்பில் அந்த கேள்வியை மாற்றி வேறு விதமாக ஒரு கேள்வியை முன்வைத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
"அடுத்த முறை TNPSC வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் முக ஸ்டாலின். இந்த லட்சணத்தில் இவர்களுக்கு கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டுமாம்.
ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் தங்களுக்கு "விடியல்” அளிப்பார் என தமிழக மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் உண்மையில் யாருக்கு விடியல் அளித்தார்?
(அ) போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய மாஃபியா
(ஆ) தீவிரவாதிகள் மற்றும் பாலியல் குற்றவாளிகள்
(இ) சொந்த குடும்பத்தினர்
(ஈ) மேற்கூறிய அனைத்தும்
இதேபோல் பாஜக ஹெச் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கம்பன் பிறந்த தமிழ்நாடு. உயர் கல்வி சிறந்த தமிழ்நாடு. நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு என மகாகவி பாரதி போற்றிப் புகழ்ந்த தமிழகத்தின் கல்வித் திறத்தின் இன்றைய அவல நிலை.
தாய்மொழி அறிவில் கடைசி இடத்தில் தமிழகம். கணிதமேதை ராமானுஜரால் பெருமை பெற்ற தமிழகம் தற்போது எண் கணிதத்தில் கடைசி இடத்தில் இருப்பது வேதனைக்குரிய விஷயம்.
திராவிடத்தால் அறிவில் சிறந்த தமிழ் சமூகத்தின் கற்றல் திறனும், ஆற்றல் திறனும் கடைசி இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 2022 ஆம் வருடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 47,000 மாணவர்கள் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 36,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.
பொதுத்தேர்வில் தாய்மொழி பாடத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தோல்வியடைவது தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை தாய்மொழி வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் செயல்படுவதை காட்டுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
English Summary
BJP TN TNPSC TNGovt MK Stalin