மத்திய அரசின் திட்டங்கள் தான் தமிழக பட்ஜெட்-பாஜக வானதி சீனிவாசன்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள 2022-2023 ஆண்டு பட்ஜெட் மத்திய அரசு வெளியிட்டுள்ள திட்டங்களை போல உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2022-2023 ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

கல்வி, விவசாயம், சுகாதாரம், மருத்துவம் என பல துறைகளுக்கும் நிதி ஒதுக்கி பட்ஜெட் உரை இருந்தது. சுமார் ஒரு மணிநேரம் 50 நிமிடங்களுக்கு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசித்து முடித்தார்.

பல்வேறு மேம்பாட்டு அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் கூறினாலும், தமிழகத்திற்கு தேவையான மேம்பாட்டு திட்டங்கள் குறித்த அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழ்நாட்டின் பட்ஜெட் அறிவிப்புகள் பிரதமர் மோடி வெளியிட்ட திட்டங்களை தமிழில் மொழிபெயர்த்தது போல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதே திட்டங்களை தான் பிரதமர் மோடி தேசிய அளவில் செயல்படுத்தி வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP vanathi srinivasan speech about Tamilnadu Budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->