மத்திய அரசின் உதவி இல்லாமல் தமிழக மீனவர்களை மீட்க முடியாது - இரா. முத்தரசன் அறிக்கை..!!
Central Govt Help Need For REscueing TN Fisher Men R Mutharasn Says
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப் படுவதும், தாக்கப் படுவதும், படகுகள் கைப்பற்றப் படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை மத்திய அரசு தான் தடுக்க முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசு தெரிவித்துளளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூலை 9ம் தேதி 176 விசைப் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 11) அதிகாலை வரை மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் வழியில், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்து காங்கேசன் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் 3 விசைப் படகுகளும், 13 மீனவர்களும் அடங்குவர்.
இதனிடையே கடந்த 26 நாட்களில் இலங்கை கடற்படை இதுவரை 26 தமிழக மீனவர்களுடன் 13 விசைப் படகுகள், மீன்பிடி வலைகள், மீன் பிடிக்கும் உபகரணங்கள் மற்றும் மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடி உரிமையையும் பாதுகாப்பதாக மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து தமிழக மீனவர்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் இந்த செயலை இ. கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் உடனடியாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டால் தான் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்
English Summary
Central Govt Help Need For REscueing TN Fisher Men R Mutharasn Says