காங்கிரஸ் ஆட்சியில் மின் வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரிப்பு - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் தான் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக காங்கிரஸ் பாஜக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி தனது பேருந்து யாத்திரை தொடக்க விழாவில் முதல் தேர்தல் வாக்குறுதியை அளித்தது. அதில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அனைத்து வீடுகளுக்கும் மாதம்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார். அதன்படி அவர்களது ஆட்சி காலத்தில் போதிய மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் இவர்களா இலவச மின்சாரம் கொடுப்பார்கள் என குற்றம் சாட்டினார்.

மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் தான் கர்நாடகா மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அவர் பேசியுள்ளார். தற்போது இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central minister Pragalath Joshi speech about Karnataka population


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->