காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பெரும் பின்னடைவு.!
CharanjitSinghChanni
தேசிய காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி இந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தற்போது வரை வெளியாகியுள்ள தேர்தல் முன்னிலை நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கிறது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. எஸ் ஏ டி 4 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், மற்ற கட்சிகள் இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவரான சரண்ஜித் சிங் சன்னி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். பதாவூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது வரை 23 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி உள்ளார்.