#சென்னை || மதுபோதையில் வடமாநில ஓட்டுனரிடம் தகராறு.! ஆத்திரத்தில் லாரியை ஏற்றி 3 பேரை கொலை செய்த வடமாநிலத்தவர்.!
chennai vada perumpakkam murder case
சென்னை அருகே, மது போதை தகராறில் லாரியை ஏற்றி இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் உள்ளிட்ட இருவர் சேர்ந்து, தமிழகத்தை சேர்ந்த மூன்றுபேர் மீது லாரியை ஏற்றி கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை வட பெரும்பாக்கத்தில் லாரி பார்க்கிங் லாட் அருகே, கமலக்கண்ணன், நவீன் குமார், குமரன் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அங்கு நிறுத்தியிருந்த லாரியை வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது, மது குடித்துக் கொண்டிருந்த மூன்று நபர்களுக்கும், லாரி ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் கண்ணையா, லாரியை வேகமாக இயக்கி மூன்று பேர் மீது மோதினார்.
இதில் கமலக்கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், குமரன் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக பலியான நபர்களின் உறாவினர்கள் ஆத்திரத்தில் லாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் லாரி கண்ணாடிகள் உடைந்து சேதமாகின. மேலும், இந்த கொலை சம்பவம், தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
chennai vada perumpakkam murder case