சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மாணவிக்கு நடந்த பயங்கரம்: 8 மணிநேரத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கை!
Chidambaram Govt college Student harassment case
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் பாலியல் புகாரின் அடிப்படையில், ஆய்வக உதவியாளர் சிதம்பரராஜன் (வயது 34) இன்று காலை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், வேதியியல் ஆய்வகத்தில் பணியாற்றும் சிதம்பரராஜன் தன்னிடம் தவறான நடந்து கொண்டதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் அளித்தார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவியின் புகாரை உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயசீலி தலைமையிலான குழு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியான சிதம்பரராஜனை சி.முட்லூர் ஏ. மண்டபத்திலிருந்து இன்று அதிகாலை கைது செய்தது.
மாணவி புகார் அளித்த சுமார் 6 மணி நேரத்தில் போலீசார் இந்த நடவடியை எடுத்துள்ளனர். அதே சமயத்தில் தமிழகத்தில் கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி கேள்வியாகவே தொடர்வதை அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் உறுதி செய்கின்றன.
மாணவிகளுக்கு எதிரான இந்த அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கல்வி நிலையங்களில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
English Summary
Chidambaram Govt college Student harassment case