பாராட்டு மழையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! எந்தத் துறையையும் விட்டு விடாத all-round டர்...! பதிலுறையிலும் centum...! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


தமிழக பட்ஜெட் தாக்கல் விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசை பாராட்டு மலையில் நனைய வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு  ஒன்று  வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,"ரூ.2000 கோடியில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா? எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்.

கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!

யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister praise Finance Minister all rounder not leave any sector Centum reply


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->