தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக நிற்கிறது திமுகவின் சட்டத்துறை; முதலமைச்சர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


திமுக சட்டத்துறை 03வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது அவர்  திமுகவில் உள்ள அணிகளில் தனித்துவமான அணி சட்டத்துறை அணி. பொய்களை தகர்த்தெறிந்து 75 ஆண்டு காலம் திமுக நிமிர்ந்து நிற்கிறது. இதற்கு தொண்டர்களின் தியாகம் தான் காரணம் என்று கூறினார்.

அத்துடன், தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் இனத்தை காக்கும் அரணாக, திமுக சட்டத்துறை திகழ்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் திமுகவின் சட்டத்துறை தான். எமர்ஜென்சி காலத்தில் நான் உள்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டோம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்களுக்கான போராட்டங்களை நடத்தியபோது வழக்குகளை சந்தித்தோம்.

திமுகவின் சட்டத்துறை, சாதனை துறையாக விளங்கி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை இறுதி வரை எதிர்த்து போராட வேண்டும். நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக சட்டத்துறை மூலம் சட்டப் போராட்டம் நடத்துகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம். இந்திய நாட்டையும், அரசியலைப்பு சட்டத்தையும் பாதுகக்க நாம் போராடி வருகிறோம் என்றஎம் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin addressed the 3rd state conference of DMK Legal Department


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->