கள்ளக்குறிச்சி சம்பவம் : பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 5000.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எதிர்க் கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , இந்த விவகாரத்தில் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை இன்னும் இரண்டு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று காவல் துறையிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த கள்ளச்சாராய பலி சம்பவம் தன்னை மிகவும் வேதனைப் படுத்தி உள்ளது என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த சம்பவத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சமும், பெற்றோர் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோர் இருவரையும் அல்லது ஒரு பெற்றோரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை அவர்களது பாதுகாவலர்களின் பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ. 5000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சட்ட சபையில் உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Announces Rs 5000 Relief For Childrens Who Lost Their Parents


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->