#BREAKING || சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மரணம் குறித்து, சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் உயிரிழந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வ்ழக்கு விவரம்: 

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் பிரபாகரன். மாற்றுத்திறனாளியான இவரும் இவருடைய மனைவி ஹம்சலா ஆகிய இருவரையும் ஒரு திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் காவல் நிலைய போலீஸார் கடந்த 10ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி பிரபாகரன் நாமக்கல் சிறையிலும், ஹம்சலா சேலம் மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதாகும், இதனால் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரபாகரன் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு உயிரிழந்தார். 

இதனையறிந்த பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர்கள், போலீசார் தாக்கியதால் தான் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பிரபாகரன் உயிரிழப்புக்கு காரணமான சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்களும், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் ஆவேசமாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன், பூங்கொடி, தலைமை காவலர் குழந்தைவேல் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரபாகரனின் மரணத்தை மர்ம மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN ORDER FOR CBCID POLICE Enquiry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->