சென்னை பேய் மழை., பாதிப்புக்கு அதிமுக ஆட்சிதான் காரணம் - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்பகல் முதல் நள்ளிரவு வரை சென்னையில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் மிதக்க தொடங்கியது.

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நேற்று பெய்த கன மழை காரணமாக மூன்று பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்,

"எப்போதும் வானிலை ஆய்வுமையம் முன்னெச்சரிக்கை கொடுக்கும். ஆனால், இந்த முறை அவர்களே ஏமாந்து விட்டார்கள். அதற்காக அவர்கள் வருத்தமும் தெரிவித்துள்ளார்கள். 

எதிர்பாராத வகையில் திடீரென பேய் மழை பெய்துள்ளது. இந்த மழை வெள்ள பாதிப்பை எப்படியாவது சரிப்படுத்த வேண்டும் என்று, வார் ரூமுக்கு நேரடியாக நேற்று நள்ளிரவு சென்று, என்னென்ன பணிகள் நடந்து கொண்டிருப்பது என்பதை ஆய்வு செய்தேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில்.. மழை தேங்கி உள்ள பகுதிகளில்.. மோட்டார் வைத்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். இது ஓரளவுக்கு எனக்கு திருப்தியாக உள்ளது. நிச்சயமாக இன்றைக்குள் அனைத்தும் சரி செய்யப்படும்.

கடந்த பத்து வருஷமாக குட்டிச்சுவராக்கி வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை. இந்த நேரத்தில் நான் அது குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இந்த பிரச்சனையை முடிவு கட்ட வேண்டும். அடுத்த மழை மழை காலம் வருவதற்குள் இதனை முழுவதுமாக சரி செய்வோம் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN SAY ABOUT CHENNAI RAIN YESTER DAY


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->