#BigBreaking || 'விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி - முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி.! - Seithipunal
Seithipunal


கடந்த இரு தினங்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணம், நகை ஆகியவற்றை இழந்ததுடன் பெருமளவில் கடனுக்கும் ஆளானதால், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பொம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 3 நாட்கள் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக 2 தற்கொலைகளும், ஒரு கொள்ளையும் நடந்திருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 

ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஒரே தீர்வு திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை இயற்றுவது தான். அதை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவர் மருத்துவர் இராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியலை கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், .ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும். என்று கோரிக்கை வைத்தா.

இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், 'விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று உறுதியளித்தார். மேலும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN SAY ABOUT ONLINE GAME BAN ISSUE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->