அமித்ஷாவின் கருத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!!
CM Stalin Tweet for Hindi Issue
இந்தியாவில் ஆங்கிலத்திற்கு மாற்ற இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தி தொடர்பான அமித்ஷாவின் கருத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
CM Stalin Tweet for Hindi Issue