இஸ்லாமியர்களை "எச்ச சோறு" என்ற திமுக ஆபாச பேச்சாளர் சிவாஜி - காவல் நிலையத்தில் புகார்!
Complaint against DMK Sivaji Krushnamoorthy Islam people
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்களை பற்றிய அவதூறு கருத்துகள் கூறியதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகர் விஜயை குறித்துப் பேசும் போதே, இஸ்லாமியர்களைப் பற்றிய அவமதிப்பான கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களைப் பாதிக்கும் வகையில் அவர் பேசியது, சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பலரும் அதிருப்தியடைந்தனர்.
இதனை எதிர்த்து, இன்று பல்வேறு முஸ்லிம் அமைப்பினரும் பொதுமக்களும் வண்ணாரப்பேட்டை H1 காவல் நிலையத்தில் கூடினர். ஆய்வாளரிடம் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக முறையாக புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Complaint against DMK Sivaji Krushnamoorthy Islam people