பளார் பதிலடி!!! இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி!!! யோகி ஆதித்யநாதுக்கு முதலமைச்சர் காட்டம்....!
completely political dark comedy Yogi Adityanath CM mk stalin reply
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் விமர்சனம் செய்திருந்தார்.இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை.
இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி.நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்.இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்" என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த காட்டமான பதிலுக்கு சில பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.மேலும் இது தற்போது அரசியலில் சலசலெப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
completely political dark comedy Yogi Adityanath CM mk stalin reply