காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்.? இன்று வாக்கு எண்ணிக்கை.!
Congress leader election vote counting today
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
அதைத் தொடர்ந்து கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி தலைவர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, நேற்று முன்தினம் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மொத்தம் 9,915 மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9500க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர்.
இதனையடுத்து வாக்கு பெட்டிகள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதில் வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
மேலும் இன்று முடிவு அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் தலைவர் யார் என்பது இன்று தெரிந்துவிடும். 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தை சாராதவர் ஒருவர் தலைவராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress leader election vote counting today