ராஜராஜசோழன் இந்து தான்.. வெற்றிமாறன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்.!
Congress leader Karan Singh speech about vetrimaran statement
சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. இந்த படம் வெளியானதிலிருந்து அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன.
இது குறித்து சமீபத்தில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.
அதில் அவர், "ராஜராஜ சோழனை இந்து என்று கூறுவது தவறானது. ராஜ ராஜ சோழன் இந்து இல்லை." என்று பேசி இருந்தார். இதை கேட்ட பலரும் அவர் இந்து தான். அதனால் தான் அவர் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் கட்டி இருக்கிறார். எப்படி அவரை இன்று இல்லை என்று கூற முடியும் என்று பேசி வருகின்றனர்.
தற்போது இவருடைய கருத்துக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்போது ராஜராஜசோழன் எந்த மதத்தை சார்ந்தவர். அவரின் வழிபாடு என்ன என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கரண் சிங் பேசியதாவது, 'சிவன் ஆதி இந்து கடவுள், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோடிக்கான மக்களின் தீவிர கடவுள் நம்பிக்கையின் மையமாக உள்ளது.
கட்டிடக்கலையில் சிறப்பு நிறைந்த மிகப்பெரிய சிவன் கோவில்களில் ஒன்றான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலை ராஜராஜன் தஞ்சாவூரில் கட்டியுள்ளார். அங்கு நான் பலமுறை சென்று வணங்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜராஜ சோழன் இந்து இல்லை, சைவ மதத்தை சேர்ந்தவர் என்று சொல்வது, ஒருவர் கத்தோலிக்கர் ஆனால் கிறிஸ்தவர் அல்ல என்று சொல்வது போன்றது எனவும் இந்து மதத்தை குழப்பும் இதுபோன்ற கருத்துகள் ஏற்க முடியாதவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Congress leader Karan Singh speech about vetrimaran statement