பாகிஸ்தானிற்கு அடுத்து காங்கிரஸ் பிடிவாதம்!...அவர்களுக்கு தண்டனை இல்லையா?...காங்கிரஸ் மீது மோடி காட்டம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடப்பு மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் நான்டெட் நகரில் நடைபெற்ற அரசியல் பொது கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது,  நாங்கள் ஜம்மு-காஷ்மீரை விரும்புகிறோம் என்றும், ஆனால் அவர்களோ 370-வது பிரிவை விரும்புகிறார்கள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர், 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வருவதற்காக பாகிஸ்தான், உலகம் முழுவதும் சுற்றி வருவதாகவும், அவர்களுக்கு அடுத்து காங்கிரஸ் இந்த கொள்கையை கையிலெடுத்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும்,  ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில்  370-வது பிரிவை அவர்கள் திணிக்கிறார்கள் என்றும், இதுபோன்ற காங்கிரசை நாம் மன்னிக்கலாமா என்றும், அவர்களை நீங்கள் தண்டிப்பீர்களா, இல்லையா என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress stubborn after pakistan no punishment for them modi katham on congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->