வார்த்தை முக்கியம் பா.. கார்த்திக் சிதம்பரத்துக்கு அறிவுரை கூறிய கேஎஸ் அழகிரி!
Congress vs DMK Karthik Chidambaram vs KS Alagiri
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அவ்வப்போது திமுகவை எதிர்த்து சில கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமாகி வருகிறது.
குறிப்பாக தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் திமுகவை எதிர்க்கும் வகையில் பேசிவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது, திமுகவோடு காங்கிரஸ் வலுவான கூட்டணியில் இருப்பதாகவும், எங்களை பிரிக்க யாராலும் முடியாது என்றும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இதேபோல் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும், அவ்வபோது திமுகவுக்கு எதிரான சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அண்மையில் கூட, கூட்டணியில் இருப்பதால் நாம் கூனி குறுக வேண்டாம். தவறு நடப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். காங்கிரசுக்கு என்று தனி பலம் உள்ளது என்று பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், தென் சென்னை பகுதியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மறைமுகமாக காத்து சிதம்பரத்துக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
அதில், எதை எப்போது பேச வேண்டும் என்ற ஒரு கணக்கு உள்ளது. அதை அப்போது தான் பேச வேண்டும். அந்த பேச்சுக்கு மட்டும் தான் மரியாதை இருக்கும்.
பேசுகின்ற சபை அறிந்து, காலம் அறிந்து, கட்சியின் தலைமையை கலந்து ஆலோசித்து சில கருத்துக்களை பேச வேண்டும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அமைக்க நம் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி பலன் இல்லாமல் போய்விட்டது. ஆனால் தமிழகத்தின் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுமையாக இருக்கிறது. நம்மை பார்த்து பிறர் ஏளனம் செய்யும்படி, எதையும் நாம் பேசக்கூடாது" என்று கேஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
English Summary
Congress vs DMK Karthik Chidambaram vs KS Alagiri