தொகுதி மறுசீரமைப்பு குறித்து 45 கட்சிகளின் ஆலோசனை கூட்டம்; சீமான் புறக்கணிப்பு..!
Consultative meeting of 45 parties on constituency realignment Seeman boycotts
எதிர்வரும் மார்ச் 05-இல் நடபெறவுள்ள தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழக அரசு அணைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி பங்கேற்காது என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்தால், தமிழகம் எட்டு தொகுதிகளை இழக்கும் என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, இது குறித்து விவாதிக்க, வரும் மார்ச் 05-இல், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, தமிழகத்தில் உள்ள 45 கட்சிகளுக்கும் தமிழக அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சீமான் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது;

''மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதி மறுவரையறை என்பது, இன்று ஏற்பட்ட பிரச்னை அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பே, இதுபற்றி பேசியிருக்கிறேன். இதற்காக பல போராட்டங்களை தனித்து நின்று, நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது.'' என்று கூறியுள்ளார்.
அத்துடன் சீமான் அவர்கள்,''தொகுதி மறுவரையறை பிரச்னையில், தி.மு.க., அரசின் கருத்தை, நாங்கள் நம்ப போவதில்லை. நீண்ட காலமாக நம்பி நம்பி ஏமாந்து விட்டோம். அதனால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி தனித்து தான் போராடும். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.'' என்று கூறியுள்ளார்.
English Summary
Consultative meeting of 45 parties on constituency realignment Seeman boycotts