கூலிக்கொலைகாரர்களைவிட ஊழல்வாதிகள் ஆபத்தானவர்கள் - உச்சநீதிமன்றம் ஆதங்கம்!
corruption Govt Officials Supreme Court
அரசு துறைகளிலும் அரசியல் கட்சிகளிலும் உள்ள உயர் மட்ட ஊழல்வாதிகள், கூலிக்கொலைகாரர்களைவிட சமூகத்திற்கு மிகப்பெரிய அபாயமாக உள்ளனர் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பொது வாழ்வில் ஊழல் குறித்து கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்துள்ளது.
"ஒரு சமூகத்திற்கு கூலிக்கொலைகாரர்கள், சட்டம்ஒழுங்கு பிரச்சினைகள் போன்றவை அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது அரசாங்கத்தின் உயர் மட்ட ஊழல்வாதிகள்," என நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
இந்த கருத்துகள், பஞ்சாப் அரசின் ஒரு தணிக்கை ஆய்வாளர் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் விசாரணையின் போது வந்தது. குறித்த அதிகாரி, முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், நீதிபதிகள் இந்த கூர்மையான கருத்துக்களை தெரிவித்தனர்.
மேலும், "நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக ஊழல் செயல்படுகிறது. உயர் பதவியில் இருப்பவர்கள் தண்டனை எதுவும் பெறாமல் ஊழலில் ஈடுபடுவதால், நாட்டில் பொருளாதார மற்றும் சமூக அதிருப்தி உருவாகி வருகிறது," என்று நீதிமன்றம் கடுமையாக தெரிவித்துள்ளது.
English Summary
corruption Govt Officials Supreme Court