திமுக கூட்டணியில் CPI வேட்பாளர்கள் யார்? அதிகாரபூர்வமாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியான திருச்சியில் துரை வைகோ போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதேபோன்று நாகப்பட்டினம் தொகுதியில் வை.செல்வராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPI announced Tiruppur Nagapattinam candidate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->