மீண்டும் பாஜகவா? "சாத்தியமில்லை".. கொந்தளிக்கும் முத்தரசன்.!!
Cpi mutharasan said BJP govt posible again
நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய வாய்ப்பில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது சாத்தியமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் பாஜகவின் 10 ஆண்டு கால சாதனைகளை கூறி பிரசாரம் செய்யாலமல் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் மதவாத பிரச்னைகளை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்
English Summary
Cpi mutharasan said BJP govt posible again