அரை நூற்றாண்டாக திராவிட கட்சிகளின் ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெரியார் கொள்கைகள் கைவிடப்பட்டுள்ளன - மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு!
CPIM condemn to DMK ADMK
அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பேய்ந்தனர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது, "தந்தை பெரியார் சாதிய ஆதிக்க சக்திகளுக்கு சமாதி கட்டிய போராளி. பகுத்தறிவு சிந்தனையுடன் பெண்ணடிமையை நிராகரித்து சமத்துவம் பேசியவர்.
பெரியாரின் சிந்தனைகளில் உருவான திராவிடர் இயக்கங்கள் (திமுக, அதிமுக) கடந்த அரை நூற்றாண்டாக தமிழகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் சாதிய அடிப்படையிலான கொலைகள் அதிகரித்து வருவதும் ஆழ்ந்த கவலையளிக்கிறது. தமிழகம், சாதிய ஆணவக் கொலைகள் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது.
தலித்துகள் மீதான தாக்குதல்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையிலும் திராவிடக் கட்சிகள் (திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள்) பெரியாரின் கொள்கைகளிலிருந்து வெகுவாக விலகியுள்ளன.
தற்போதைய நிலையில் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்" என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.