#BREAKING : அதிமுக ஆர் பி உதயகுமாருக்கு கொலை மிரட்டல்.. ஓபிஎஸ் ஆதரவாளர் கைது.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவகாரம் தொடர்ந்து குழப்பான சூழல் நிலவி வரும் நிலையில், ஓபிஎஸ் அவர்கள், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ஓபிஎஸ் குறித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார், அதிமுக தலைமை பதவி மீது எனக்கு ஆசையில்லை என ஒ.பன்னீர் செல்வம் நாடக பேச்சு பேசி வருகிறார். அவரது நாடக பேச்சு மக்களிடம் எடுபடாது. சசிகலா, டி.டி.வி. தினகரனை அழைத்ததன் மூலம் அவரது நிலைப்பாட்டு மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

எம்எல்ஏ அய்யப்பன் பன்னீர் செல்வத்திடம் சென்றது தவறான வழி. குழந்தையை மிட்டாயை காண்பித்து அழைத்து செல்வது போல எம்எல்ஏ அய்யப்பன் அழைத்து செல்லப்பட்டு உள்ளார். ஒ.பன்னீர் செல்வத்துக்கு ஒரு விதமான பதட்டம் இருக்க தான் செய்கிறது. பன்னீர் செல்வம் புலி வருகிறது என சொல்லி வருகிறார். அது புலியா? பூனையா? என பின்னரே தெரிய வரும்" என தெரிவித்திருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் சரவணபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death threat to AIADMK RB Udayakumar OPS supporter arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->