டெல்லி தேர்தல் 2025: மூன்றாவது முறையாக முட்டை வாங்கிய ராகுல்காந்தி!
Delhi Election result 2025 Congress
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாமல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
70 தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெற்றது, இதில் 60.54% வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை இன்று (பிப். 8) காலை 8 மணிக்கு தொடங்கியது.
இந்தியா தேர்தல் ஆணையத்தின் தரவின்படி, காலை 12.25 மணி நிலவரப்படி பாஜக 46 இடங்களில், ஆம் ஆத்மி 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
1998-2013 வரை 15 ஆண்டுகள் டெல்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அதன் பின் ஆட்சிக்கு வரவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்றுவரை 2015, 2020 , 2024 என எந்த தேர்தல்களிலும் ஒரு இடத்தில கூட வெற்றிபெறவில்லை என்பது தான் பெரும் அதிர்ச்சி.
நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும், காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. தற்போதைய நிலவரம் அந்த கணிப்புகளை உறுதிப்படுத்துகிறது.
English Summary
Delhi Election result 2025 Congress