வேலூர் || நிறுத்தி வைக்கப்பட்ட கல்லூரி பேருந்தில் தீ விபத்து - விசாரணையில் போலீசார்.!
private college bus fire accident in vellore
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து ஆர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் இன்று மதியம் 12 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி காட்பாடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இன்று விடுமுறை நாள் என்பதால் இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் சேதமடைந்தது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்லூரி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
private college bus fire accident in vellore