காரசாரமான தக்காளி ஊறுகாய் - எப்படி செய்வது?
how to make tomatto pickle
பொதுவாகவே சாப்பாட்டிற்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவது வழக்கம். ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளது. அதிலும் தக்காளி ஊறுகாய் சுவையாக இருக்கும். இந்த நிலையில் தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி
மிளகாய்த்தூள்
வெந்தயம்
ரீஃபைண்ட் ஆயில்
பூண்டு
பெருங்காயத்தூள்
கடுகு
உளுத்தம் பருப்பு
உப்பு
தயாரிக்கும் முறை :
முதலில் தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கூழ் போன்று அரைக்க வேண்டும். இதையடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அரைத்து வைத்த தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.
இதையடுத்து வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.
English Summary
how to make tomatto pickle