திரிவேணி சங்கமத்தில் புகைப்படங்களை நனைக்க ரூ.1100 வசூலா!!!
Charge Rs1100 to get photos dipped in Triveni Sangam
உத்திரபிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை இந்நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. உலகில் உள்ள அனைத்து இந்து மதத்தினரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டி உள்ளது.

திருவேணி சங்கமம்:
இந்நிலையில் கும்பமேளாவில் டிஜிட்டல் நீராட ஒரு கும்பல் ரூ. 1100 கட்டணம் வசூலித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது கும்பமேளாவில் நீராட வரமுடியாதவர்கள் தங்களது புகைப்படங்களை whatsappபில் அனுப்பினால் அப்படங்களைத் திருவேணி சங்கமம் நீரில் மூழ்கி எடுப்போம் என்று ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த மக்கள் பலர் இதனை "மூடநம்பிக்கை" என்றும் "மோசடி" என்றும் விமர்சித்து வருகின்றனர்.
English Summary
Charge Rs1100 to get photos dipped in Triveni Sangam