ஓட்டுக்கு பணம் இல்லை., மது இல்லை., பொய் வாக்குறுதிகள் தரவில்லை., பாமக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் மோகன் ஜி சத்திரியன்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தனித்து களமிறங்கியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து பாமக வேட்பாளர்கள் களம் இறங்கி போட்டியிட்டனர்.

மாநகராட்சி வார்டுகள் : 5 இடங்களிலும், நகராட்சி வார்டுகள் : 48 இடங்களிலும், பேரூராட்சி வார்டுகள் : 73 இடங்களிலும் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட இருபத்தி ஆறாவது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் குமார் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

"ஓட்டுக்கு பணம் இல்லை., 
ஆளும் கட்சி இல்லை., 
எதிர்க் கட்சியும் இல்லை., 
வாக்காளர்களுக்கு மது இல்லை.,
பொய் வாக்குறுதிகள் தரவில்லை., 
துரோகிகளும் இல்லை., இவைகள் எதுவும் இன்றி 207 நேர்மையான வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என்று குமார் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த திரவுபதி, ருதுரத்தாண்டவம் திரைப்படத்தின் இயக்குனர் மோகன்ஜி சத்திரியன், "வாழ்த்துக்கள் அண்ணா" என்று பதில் அளித்துள்ளார். தற்போது இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dharmapuri pmk candidate kumar wish


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->